MARC காட்சி

Back
குமாரமுத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
245 : _ _ |a குமாரமுத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு -
300 : _ _ |a 32.5 செ.மீ x 18 செ.மீ
500 : _ _ |a

          இராமேசுவரம் திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தில் தென்கிழக்கு மூலையில் உள்ள சபாபதி ஈசுவரருக்கு அபிஷேக நெய்வேத்தியத்திற்காக குளத்தூர் கிராமம் தானம் வழங்கப்பட்டதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது.

          இந்தச் செப்பேட்டினால் வழங்கப்படும் ஊரை சபாபதி அம்பலத்திற்கென தனியான கட்டளை எதுவும் அந்த திருக்கோயிலில் இல்லாது இருந்த குறையை உணர்ந்து மன்னர் இந்த தானத்தின் மூலம் நிறைவு செய்துள்ளார். இந்தக் கட்டளைக்கு குளத்தூர் கிராமம் முழுமையாக வழங்கப்பட்ட போதிலும் இராமேசுவரம் நகரில் உள்ள சின்னையர் தோப்பும் புன்னைத் தோப்பும் இந்தக் கட்டளைக்காக கூடுதலாக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இராமேசுவரம் நகருக்குள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்ற நெல் முதலிய தானியங்கள் தட்டுமுட்டு சாமான்கள் கோயில் உபயோகத்திற்காக விற்கப்படுகின்ற சாமான்கள் அளக்கப்படுபவை, எண்ணப்படுபவை ஆகிய இனங்களைச் சேர்ந்தவைகளுக்கும் அரண்மனைக்காக வசூலித்து வரப்பட்ட அள்ளுத்தீர்வை, மகமை ஆகியவைகளையும் வசூலிக்கத் தேவையில்லை என்றும் இதன் கூலம் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

         இந்த வசூல் பணியில் சேதுராமலிங்க ஐயன் என்பவர் ஈடுபட்டிருந்தார் என்பதையும் இந்தச் செப்பேடு விளக்குகின்றது. இந்த வருவாய் அனைத்தும் சபாபதி கட்டளைக்கு சேரவேண்டும் என்ற பெரும் விருப்புடன் மன்னர் இந்த தானத்தை வழங்கியுள்ளார்.

510 : _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, குமார முத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்த தேவர், மன்னர், இராமநாதசுவாமி கோயில்
752 : _ _ |a இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில் |c இராமேசுவரம் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம்
905 : _ _ |a சேதுபதி / குமாரமுத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்ததேவர்
906 : _ _ |a 10.11.1733
914 : _ _ |a 9.28821834
915 : _ _ |a 79.31945223
925 : _ _ |a 32.5 செ.மீ x 18 செ.மீ
995 : _ _ |a TVA_CPS_00113
barcode : TVA_CPS_00113
book category : சேதுபதி
cover :
Primary File :

48-1.jpg

48-2.jpg

48-3.jpg

48-4.jpg

48-5.jpg

48-6.jpg

48-7.jpg

48-8.jpg